என் மலர்


விவேசினி
அமானுஷ்ய காட்டிற்குள் மாட்டிக்கொண்டவர்கள் குறித்த கதை.
கதைக்களம்
கபிலக்குறிச்சி என்னும் காட்டுப்பகுதியில் பேய் நடமாட்டம் இருப்பதாகவும் அங்கு பெண்கள் போகக்கூடாது என்றும் நம்பிக்கை இருக்கிறது. இதனை தெரிந்து கொண்ட நாசர் ஆராய்ச்சி செய்வதற்காக தன் நண்பர்களுடன் அங்கு ட்ரெக்கிங் செல்ல திட்டமிடுகிறார்.
ஆனால் கடைசி நிமிடத்தில் நாசருக்கு காலில் அடிப்பட்டு போக முடியாமல் போகிறது. இதனால் தன் மகளை போகும் படி கூறுகிறார். முதலில் போக முடியாது என்று கூறும் மகள் இறுதியில் அப்பாவின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு அந்த ஊருக்கு செல்கிறாள்.
அங்கு சென்றவர்கள் காட்டுக்குள் மாட்டிக்கொள்கின்றனர். இறுதியில் அவர்கள் காட்டில் இருந்து எப்படி வெளியேறினார்கள்? அங்கு இருக்கும் அமானுஷ்யம் தான் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாசர் தன் அனுபவ நடிப்பை கொடுத்துள்ளார். அப்பா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பாராட்டை பெறுகிறார். காவ்யா, மேகா ராஜன், வனேவிசா ஸ்டீவன்சன், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.
இயக்கம்
திரில்லர் படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் பவன் ராஜகோபாலன். ட்ரெக்கிங் சென்றவர்களுக்குள் ஏற்படும் உணர்ச்சி மோதல்களையும் ஊர் திரும்பிய பிறகு அப்பாவுக்கும் மகளுக்கும் ஏற்படும் உணர்வு மோதல்களையும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார்.
இசை
ரிசப் நாகேந்திரா இசை கேட்கும் ரகம்.
ஒளிப்பதிவு
ஓம் நாராயணின் கேமரா காட்டின் இருட்டையும் வீட்டின் வெளிச்சத்தையும் அழகாக காட்சிப்படுத்தியுள்ளது.
படத்தொகுப்பு
ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பு சிறப்பு.
காஸ்டியூம்
ஆரத்தி ராஜகோபாலன் காஸ்டியூம் டிசைனில் கதாபாத்திரங்கள் பளிச்சிடுகின்றனர்.
புரொடக்ஷன்
லாபர்னம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ‘விவேசினி’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.