search icon
என் மலர்tooltip icon
    < Back
    Yaathisai
    Yaathisai

    யாத்திசை

    இயக்குனர்: தரணி ராசேந்திரன்
    எடிட்டர்:மகேந்திரன் கணேசன்
    ஒளிப்பதிவாளர்:அகிலேஷ் காத்தமுத்து
    இசை:சக்ரவர்த்தி
    வெளியீட்டு தேதி:2023-04-21
    ஓ.டி.டி தேதி:2023-05-12
    Points:657

    ட்ரெண்ட்

    வாரம்12345
    தரவரிசை2001631218263
    Point192355533324
    கரு

    பாண்டிய பேரரசை வெல்ல சோழர்கள், சேரர்களுடன் இணைந்து எயினர் உள்ளிட்ட சிறு படைகளை கொண்ட கூட்டங்கள் போரிடுவது குறித்த கதை.

    விமர்சனம்
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கதைக்களம்

    7ஆம் நூற்றாண்டில் சேரன் தலைமையிலான சோழப் பேரரசு, பாண்டிய பேரரசை வெல்ல போர் புரிகிறது. இவர்களுக்கு துணையாக வேளிர், எயினர் போன்ற பழங்குடி மக்கள் கூட்டமும் துணை நின்று போர் புரிகிறது. போரின் இறுதியில், ரணதீரன் பாண்டியன் தலைமையிலான பாண்டியப் பேரரசு வென்று, சோழக் கோட்டையோடு சேர்த்து, மொத்த தென்திசையையும் கைப்பற்றுகிறது.

    இதிலிருந்து தப்பித்த சோழர்கள் சிலரும் எயினர்கள் கூட்டம் சிலரும் காட்டில் மறைந்து வாழ்கிறார்கள். ரணதீரன் பாண்டியனை வென்று, மீண்டும் எயினர்களுக்கு அதிகாரத்தையும் நாட்டையும் கையளிப்பேன், என சபதமேற்று எயினர் குடியின் இளைஞன் கொதி, தன் குறும்படையின் துணையுடன் ரணதீரனை வெல்ல களமிறங்குகிறான்.

    இறுதியில் கொதியின் சபதம் நிறைவேறியதா? ரணதீரனை தோற்கடித்து சோழ அதிகாரத்தை கொதி கையில் எடுத்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    பாண்டிய மன்னன் ரணதீர பாண்டியனாக வரும் சக்தி மித்ரன், எயினர் இளைஞன் கொதியாக வரும் சேயோன் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்து கவர்ந்துள்ளனர். புதுமுக நடிகர்கள் என்ற எண்ணம் தோன்றாதபடி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

    தேவரடியார்களாக வரும் ராஜலட்சுமி மற்றும் வைதேகி அமர்நாத் சில காட்சிகளில் வந்துபோனாலும் மனதில் நிற்கும்படியான நடிப்பை கொடுத்துள்ளனர். எயினர் கூட்டத்தின் பூசாரியாக வரும் குரு சோமசுந்தரம் ஒரே ஒரு நீண்ட காட்சியில் வந்தாலும் வலுசேர்த்துள்ளார். படத்தில் வரும் சில கதாப்பாத்திரங்களின் நடிப்பு செயற்கையாக உள்ளது.

    இயக்கம்

    7-ஆம் நூற்றாண்டின் கதை களத்தை தேர்வு செய்து மன்னர்கள், எயினர்கள், பழங்குடி இன மக்கள் என அனைவரையும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் தரணி ராசேந்திரன். இருந்தாலும் திரைக்கதையில் விறுவிறுப்பு குறைவு, சங்கத் தமிழின் சொல்லாடல் பிரச்சனைகள் படத்தின் பலவீனமாக உள்ளது. கதாப்பாத்திரத்தின் தேர்வு ஓகே என்றாலும் புதுமுக நடிகர்கள் என்பதால் கதாப்பாத்திரங்களை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது. திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லை.

    இசை

    சக்ரவர்த்தியின் பின்னணி இசை கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

    ஒளிப்பதிவு

    படத்தை ஒளிப்பதிவின் மூலம் பிரமாண்டப்படுத்த முயற்சி செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் அகிலேஷ் காத்தமுத்து.

    படத்தொகுப்பு

    மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு அருமை.

    காஸ்டியூம்

    சுரேஷ் குமார் காஸ்டியூம் டிசைனில் கதாபாத்திரங்கள் பளிச்சிடுகின்றனர்.

    புரொடக்‌ஷன்

    வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் ‘யாத்திசை’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.கதைக்களம்


    உங்கள் மதிப்பீடு
    இந்த திரைப்படத்தை விரிவாக மதிப்பாய்வு செய்து மதிப்பிடுவதற்கு உள்நுழை/பதிவு செய்க.
    ×