என் மலர்


ஜீப்ரா
வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம்.
கதைக்களம்
வங்கியில் வேலை செய்து வருகிறார் நாயகன் சத்ய தேவ். இவரது காதலி பிரியா பவானி சங்கர் மற்றொரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். காதலி பிரியா பவானி சங்கரை ஒரு பிரச்சனையில் இருந்து காப்பாற்றுவதற்காக மோசடி செய்து ரூ.4 லட்சத்தை வேறு ஒருவர் வங்கி கணக்கில் இருந்து எடுக்கிறார். அதே சமயம் அதே வங்கி கணக்கில் இருக்கும் ரூ.5 கோடியை சத்ய தேவ் பெயரில் மற்றொருவர் மோசடி செய்து எடுத்து விடுகிறார்
அந்த 5 கோடி ரூபாயால் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்ளும் சத்ய தேவ், அதில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்.
இறுதியில் சத்ய தேவ் பிரச்சனையில் இருந்து மீண்டாரா? இல்லையா?, அவரது பெயரை பயன்படுத்தி அந்த பணத்தை எடுத்தது யார்? என்பதை படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சத்ய தேவ் நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். காதலியை காப்பாற்ற செய்யும் மோசடியை தொடர்ந்து வரும் மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து மீள்வதற்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிகளிலும் வேகம், பயம், பதற்றம் என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தி கவர்ந்து இருக்கிறார்.
வில்லத்தனம் கலந்த ஹீரோவாக நடித்திருக்கும் டாலி தனஞ்செயா, பார்வையில் மிரட்டுகிறார். காமெடியில் சுனில் வர்மா & சத்யா அக்காலா இருவரும் கலக்கி இருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
இயக்கம்
வங்கி கொள்ளையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக். வங்கிகளில் நடக்கும் மோசடிகளை வெளிக்காட்டிய விதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது. அதிலும், பயன்படுத்தாத கணக்குகளில் இருக்கும் பணத்தை வங்கி அதிகாரிகள் நினைத்தால் கைப்பற்றலாம் என்பதை விவரிக்கும் காட்சி ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. முதல் பாதி திரைக்கதையில் குழப்பம் இருந்தாலும் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக நகர்த்தி சமன் செய்து இருக்கிறார்.
இசை
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மர் காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
தயாரிப்பு
Old Town Pictures - Padmaja Films India Private Ltd தயாரிப்பு நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.