என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல்லை தனியார் பள்ளியில் காலாண்டு தேர்வு எழுத 10 மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு- பரபரப்பு
Byமாலை மலர்26 Sept 2022 3:12 PM IST
- சுமார் 10 மாணவர்களை 10-ம் வகுப்பு தேர்வு எழுத விடாமல் பள்ளி நிர்வாகம் வெளியே நிறுத்தி உள்ளது.
- ரூ.100 அபராத தொகை வழங்கினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 1,000 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை சுமார் 10 மாணவர்களை 10-ம் வகுப்பு தேர்வு எழுத விடாமல் பள்ளி நிர்வாகம் வெளியே நிறுத்தி உள்ளது. இதனை அறிந்த அவர்களது பெற்றோர் அங்கு சென்று கேட்டபோது சம்பந்தப்பட்ட மாணவர்கள் பள்ளியில் உள்ள டைல்ஸ் தரையை உடைத்ததாகவும், அதற்காக ரூ.100 அபராத தொகை வழங்கினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிப்பதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு 100 ரூபாய் அபராத தொகையை கட்டி உள்ளனர். சிலர் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் நேரில் சென்று விளக்கம் கேட்டுள்ளனர். அதன் பின்னரே மாணவர்களை பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதித்தது.
Next Story
×