என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெஞ்ஞானபுரம் பகுதியில்  வியாபாரி வீட்டில் 11 ஆடுகள் திருட்டு
    X

    மெஞ்ஞானபுரம் பகுதியில் வியாபாரி வீட்டில் 11 ஆடுகள் திருட்டு

    • ஆடுகள் பகலில் அந்த பகுதியில் மேய்ச்சல் முடித்து நேற்று முன்தினம் இரவு வீட்டு காம்பவுண்டில் உள்ள பட்டியில் அடைத்திருந்தார்.
    • இதே போல் இவரது பட்டியில் உள்ள ஆடுகள் பலமுறை திருட்டு போய் உள்ளது.

    திருச்செந்தூர்:

    மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சோலைகுடியிருப்பை சேர்ந்தவர் ஜெபராஜ் தனசிங் (வயது57). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கு சொந்தமாக 25ஆடுகள் உள்ளன.இந்த ஆடுகள் பகலில் அந்த பகுதியில் மேய்ச்சல் முடித்து நேற்று முன்தினம் இரவு வீட்டு காம்பவுண்டில் உள்ள பட்டியில் அடைத்திருந்தார். அதிகாலையில் ஜெபராஜ் தனசிங் எழுந்து பட்டியில் உள்ள ஆடுகளை பார்க்க சென்றார்.அப்போது அங்கு பட்டியில் இருந்த 11ஆடுகளை காணவில்லை.

    அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் மதிப்பு சுமார் ரூ. 70ஆயிரம் இருக்கும். இதே போல் இவரது பட்டியில் உள்ள ஆடுகள் பலமுறை திருட்டு போய் உள்ளது. தொடர்ந்து மர்ம நபர் ஆடுகளை திருடி செல்வதாக புகார் செய்துள்ளார்.

    இதே போல் இவரது தோட்டத்தில் நிறுத்தி இருந்த மண்ணை சமப்படுத்தும் கருவி மற்றும் இரும்பு சக்கரம் ஆகியவற்றையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். அதை கண்டுபிடித்து தருமாறும் திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.35ஆயிரம் இருக்கும்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் ஆடுகள் மற்றும் மண்ணை சமப்படுத்தும் கருவியை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×