search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் ரூ.12 கோடிக்கு மது விற்பனை
    X

    நாமக்கல் மாவட்டத்தில் ரூ.12 கோடிக்கு மது விற்பனை

    • சமீபகாலமாக அனைத்து பண்டிகை கால கொண்டாட்டங்களில் மதுபானம் முக்கிய இடம் பிடித்து வருகிறது.
    • அதற்கு ஏற்றாற்போல், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக மதுபான பாட்டில்கள் இருப்பு வைக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    சமீபகாலமாக அனைத்து பண்டிகை கால கொண்டாட்டங்களில் மதுபானம் முக்கிய இடம் பிடித்து வருகிறது. அதன் காரணமாக பண்டிகை, விடுமுறை நாட்களில், மதுபான விற்பனை அதிகரிப்பது வழக்கமாகி உள்ளது. அதற்கு ஏற்றாற்போல், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூடுதலாக மதுபான பாட்டில்கள் இருப்பு வைக்கப்படுகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 188 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் கடந்த 14-ம் தேதி மற்றும் 15-ம் தேதி ஆகிய 2 நாட்கள் மதுபான விற்பனை அமோகமாக நடந்தது. பெரும்பாலான கடைகளில் மது பிரியர்கள் வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர். இந்த 2 நாட்களில் மட்டும் ரூ.12 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன.

    இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் சாதாரண நாட்களில், ரூ.3 கோடி முதல் ரூ.3.5 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனையாகும். ஆனால், கடந்த 14-ம் தேதி ரூ.6.5 கோடிக்கும், 15-ம் தேதி ரூ.5.5 கோடிக்கும் மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன. காணும் பொங்கலை முன்னிட்டு நேற்றும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுவிற்பனை சூடுபிடித்தது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்கள் ரூ.11.5 கோடிக்கு மதுபான விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×