என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15.73 கோடி உதவித்தொகை - கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
- தூத்துக்குடி மாவட்டத்தில் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை 95 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது.
- உதவித்தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடையாள அட்டை
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 40 சதவிகிதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட 41,773 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை 95 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது.
2022-2023-ம் நிதி யாண்டில் 110 பேருக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி சக்கர நாற்காலி, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 27 மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன வசதிகளுடன் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 885 மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பேசி வழங்கப்பட்டு ள்ளது.
உதவித்தொகை
முதல்-அமைச்சர், 40 சதவிகிதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவிகிதம் கடும் உடல் பாதிப்பு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவ ட்டத்தில் 6,554 மாற்றுத்திறனா ளிகளுக்கு ஆண்டு ஒன்றிற்கு ரூ.15 கோடியே 72 லட்சத்து 96 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள்
2022-2023-ம் கல்வியாண்டில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.1,000 வீதமும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3 ஆயிரமும் மற்றும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.4 ஆயிரம் வீதமும், இளங்கலை பட்டம் பயிலும் மாற்றுத்திறனாளிக்கு ரூ.6 ஆயிரம் வீதமும் மற்றும் முதுகலைப் பட்டம் பயிலும் மாற்றுத்திறனாளிக்கு ரூ.7 ஆயிரம் வீதமும் என மொத்தம் ரூ.7 லட்சத்து 18 ஆயிரம் வழங்கப்ப ட்டுள்ளது.
நிதியுதவி
2022-2023-ம் நிதியாண்டில் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 22 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 176 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலவாரிய திட்டத்தின் கீழ் விபத்து மரணம் நிதியுதவி ரூ.1 லட்சம் மற்றும் இயற்கை மரணம் நிதியுதவி ரூ.17 ஆயிரம் வீதம் 2022-2023-ம் நிதியாண்டில் ரூ.4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நவீன செயற்கை கால், கை செய்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2022-2023-ம் நிதியாண்டில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நவீன செயற்கை கால், கை செய்து வழங்கப்ப ட்டுள்ளது.
பஸ் பயண அட்டை
பார்வையற்ற மாற்றுத்திற னாளிகள் மாவட்டம் முழுவதும் கட்டண மில்லாமல் பயணிக்க இலவச பஸ் பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், தேசிய அடையாள அட்டை நகலுடன் கட்டண சலு கையில் தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் செல்ல போக்குவரத்துத் துறையில் தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்