search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் 2 ரெயில்கள் 6 நாட்கள் முழுமையாக ரத்து
    X

    கோவை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் 2 ரெயில்கள் 6 நாட்கள் முழுமையாக ரத்து

    • வடகோவை-கோவை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
    • ஏப்ரல் 2, 3, 4, 7, 8, 9 ஆகிய தேதிகளில் ரெயில் ரத்து.

    கோவை,

    கோவை-மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் 2 ரெயில்கள் 6 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வடகோவை-கோவை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் கோவையில் இருந்து ஏப்ரல் 2, 3, 4, 7, 8, 9 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.45 மணிக்கு மேட்டுப்பாளையம் புறப்பட்டு செல்லும் ரெயில் (எண்.06816) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஏப்ரல் 2,3,4,7,8,9 ஆகிய தேதிகளில் மாலை 4.45 மணிக்கு கோவை புறப்பட்டு ரெயில்(எண்:06817) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    வருகிற 4-ந் தேதி பிற்பகல் 3.42 மணிக்கு கோவை வர வேண்டிய, பிலாஸ்பூர்-எர்ணாகுளம் இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்(எ ண்:22815) கோவைக்கு பதில் இருகூர்-போத்தனூர் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

    இந்த ரெயில் போத்தனூருக்கு பிற்பகல் 3.42 மணிக்கு வந்தடைந்து, பிற்பகல் 3.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

    திருச்சி பாலக்காடு நகரம் இடையிலான தினசரி ரெயில்(எண்:16843) ஏப்ரல் 2, 3, 4, 7, 8, 9 ஆகிய தேதிகளில் தேவையான இடத்தில் 15 நிமிடங்கள் நிறுத்தி வைத்து இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திகுறிப்பில், கோவை-திருப்பூர் வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் கோவையில் இருந்து காலை 9.05 மணிக்கு சேலம் புறப்பட்டு செல்லும் மெமு ரெயில்(எண்:06802) இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×