என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் கயத்தாறில் மாற்றுக்கட்சியினர் 200 பேர் தி.மு.க.வில் இணைந்தனர்
- கயத்தாறு பேரூராட்சி பகுதியில் 100 நாள் வேலைத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
- நீர் -மோர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
கயத்தாறு:
தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். அதற்காக தொகுதி வாரியாக பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது.
அதன்படி தூத்துக்குடி தொகுதி பொறுப்பாளரும், மாநில நெசவாளர் அணி செயலாருமான சொ. பெருமாள் ஏற்பாட்டில் கயத்தாறு ஒன்றிய பா.ஜ.க. அமைப்பு சாரா தொழிற் பிரிவுதுணைத் தலைவர் மாரியப்பன், அ.தி.மு.க. வக்கீல் பிரிவு மாநகர் மாவட்ட அவை தலைவரும், நெல்லை முன்னாள் அரசு குற்றவியல் கூடுதல் வக்கீலும், கயத்தாறு முஸ்லிம் ஜமாத் தலைவருமான பீர்முகைதீன், தொழிலதிபர்கள் இளங்கோவன், சீனிவாசன், செல்வராஜ் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 200 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். தொடர்ந்து அனைவரையும் அமைச்சர் கீதாஜீவன் சால்லை அணிவித்து வரவேற்றார்.
தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-
வருகிற செப்டம்பர் 15-ந் தேதி முதல் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகிறது. கயத்தாறு பேரூராட்சி பகுதியில் 100 நாள் வேலைத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நடைபெற உள்ள பாராளு மன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நாம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் தீவிர மாக பணியாற்ற வேண்டும்.
நாம் அனைவரும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினினுக்கு பக்கபல மாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செய லாளர் ஆனந்த சேகரன், வடக்கு மாவட்ட விளை யாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வக்கீல் பால குருசாமி, ஒன்றிய செய லாளர் சின்ன பாண்டியன், பகுதி செயலாளர் ராம கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி பிரபாகரன், சி.எஸ். ராஜா, மருத்துவ அணி அருண்குமார், முன்னாள் கவுன்சிலர் செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் கருணா, ஆல்பர்ட், மணி, ரவி உள்பட தி.மு.க.வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கயத்தாறு
கயத்தாறில் பேரூராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் நீர் -மோர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செய லாளர் சின்ன பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை அமைப் பாளர் ராஜதுரை, பேரூராட்சிமன்ற கவுன் சிலர்கள் நயினார் பாண்டி யன், செல்வகுமார், ஆதி லட்சுமி அந்தோணி, தேவி கண்ணன் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் சந்தனமணி, சேக் தாவீது கட்சி பிரமுகர்கள் கொம்பையா பாண்டியன், ராஜாபுதுக்குடி சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்