search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இடமிருக்கிறதா?- அண்ணாமலை விளக்கம்
    X

    அண்ணாமலை(கோப்பு படம்)

    குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இடமிருக்கிறதா?- அண்ணாமலை விளக்கம்

    • பாஜக எவ்வளவு சீட் வாங்க போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் அல்ல இது.
    • பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான மணிநகரில் பிரச்சாரம் செய்ய உள்ளேன்.

    மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-

    பிரதமர் மோடி, 11ந் தேதி மதியம் 1.50 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். பின்னர் பிற்பகல் 2.20 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். பிரதமர் மோடிக்கு காந்தி கிராமத்தில் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்.

    காந்தி கிராம பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று விட்டு 4.30 மணிக்கு பிரதமர் விசாகப்பட்டினம் புறப்பட்டு செல்கிறார். மகாத்மா காந்தி 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த இந்த கிராம பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு பிரதமர் வருகிறார்.

    குஜராத் சட்டசபைத் தேர்தலில் இந்த முறை, பாஜக சரித்திரத்தில் எவ்வளவு சீட் ஜெயிச்சு இருக்கிறதோ அதை விட ஒரு சீட் அதிகமாக ஜெயிக்கும். தமிழக பாஜக தலைவர்கள் பிரச்சாரத்திற்கு குஜராத் செல்கிறார்கள். குறிப்பாக நான் பிரதமரின் சொந்த தொகுதியான மணிநகரில் பிரச்சாரம் செய்ய உள்ளேன். அகமதாபாத்தில் உள்ள அந்த தொகுதியில் 35 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். பரோடா உள்பட பல்வேறு பகுதிகளிலும் பாஜக மூத்த தலைவர்களும் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

    இந்த முறை குஜராத் தேர்தலில் பாஜக இமாலய வெற்றி பெறும். அதேபோல் இமாச்சல் பிரதேசத்திலும் பாஜக மிகப் பெரிய வெற்றியை பெறும். குஜராத்தல் இரண்டாவது மூன்றாவது இடம் யாருக்கு என்பதுதான் இப்போது போட்டி. காங்கிரஸ் இடத்தை ஆம் ஆத்மி பிடிக்குமா? அதுவும் குறிப்பாக தற்போது நடைபெற்று முடிந்த 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பல தொகுதிகளில் காங்கிரஸ் டெபாசிட் வாங்கவில்லை.

    அதை பார்க்கும் போது காங்கிரஸ் எப்படி பின்னோக்கி சென்றிருக்கிறது என்பது தெரிகிறது. அதனால் குஜராத் தேர்தல் என்பது பாஜக எவ்வளவு சீட் வாங்க போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தல் அல்ல. பல ஆண்டு காலமாக அங்கு ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிக்கு குஜராத் தேர்தலில் இடமிருக்கிறதா, இரண்டு மூன்று இடங்களிலாவது அவர்கள் ஜெயிப்பார்களா என்பதை இந்த தேர்தல் தீர்மானிக்கப் போகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×