search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முட்டம் தாய்-மகள் கொலையில் வடமாநில தொழிலாளிகளுக்கு தொடர்பு?
    X

    முட்டம் தாய்-மகள் கொலையில் வடமாநில தொழிலாளிகளுக்கு தொடர்பு?

    • 3 தனிப்படை போலீசார் கொலை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
    • கொலை செய்யப்பட்ட தாய், மகள் இருவரும் வசித்து வந்த பகுதியில் வீடுகள் குறைவாகவே உள்ளது. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்டே கொலையாளிகள் இருவரை யும் கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    வெள்ளிச்சந்தை அருகே முட்டம் தூய குழந்தை இயேசு தெருவை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவரது மனைவி பவுலின் மேரி (வயது 48).

    இவர்களுக்கு ஆலன் (25) ஆரோன் (19) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஆன்றோ சகாயராஜ் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருடன் இவரது மூத்த மகன் ஆலனும் வேலை செய்து வந்தார். ஆரோன் சென்னையில் என்ஜினீயரிங் படித்து வருகிறார்.

    வீட்டில் பவுலின் மேரி மற்றும் அவரது தாயார் திரேசம்மாள் (90) ஆகிய இருவரும் இருந்தனர். நேற்று காலை வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த உறவி னர்கள் வெள்ளிச்சந்தை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பவுலின் மேரி, திரேசம்மாள் இருவரும் வீட்டின் முன் அறையில் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.

    கொலை செய்யப்பட்ட வர்கள் கழுத்தில் கிடந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிர சாத்தும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    இது குறித்து வெள்ளி ச்சந்தை போலீசார் வழ க்குப்பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு சில முக்கிய தடயங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    கொலையாளிகள் மின் மீட்டரை சேதப்படுத்தி உள்ளனர். மேலும் வீட்டில் இருந்த அயன்பாக்ஸ் ஒன்றிலும் ரத்தக்கறை படிந்து இருந்தது. எனவே கொலையாளிகள் அயன்பாக்ஸ் மூலமாக தாய், மகள் இருவரையும் தாக்கி கொலை செய்து இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

    தாய், மகள் இருவரும் ஒரே அறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததால் இந்த கொலை யில் ஒன்றுக்கு மேற்பட்ட வர்கள் சேர்ந்துதான் இந்த கொலையை அரங்கேற்றி இருக்க வேண்டும் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    ரத்தக்கறை படிந்திருந்த அயன்பாக்ஸ், இரண்டு மப்ளரையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து விட்டு மாலையில் தான் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இந்த கொலையை அரங்கேற்றி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.

    கொலையாளிகள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களின் தொடர்பில்லாமல் இந்த கொலையை அரங்கேற்றி இருக்க முடியாது. எனவே அதே பகுதியைச் சேர்ந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உறவினர்கள் சிலரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வருவது தெரிய வந்தது. அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட பவுலின்மேரி, திரேசம்மாள் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி யில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டுள்ளனர்.

    இதற்கிடையில் வெளி நாட்டில் உள்ள பவுலின் மேரியின் கணவர், மகன் இருவரும் இன்று மாலை ஊருக்கு வருவதாக அவரது உறவினர்கள் தெரி வித்தனர். சென்னையில் உள்ள பவுலின் மேரியின் மகன் ஆரோன் இன்று ஊருக்கு வந்தார். தாயாரின் உடலை பார்த்து கதறி அழுத அவரை உறவினர்கள் சமாதானம் செய்தனர். தாய், மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொலை செய்யப்பட்ட தாய், மகள் இருவரும் வசித்து வந்த பகுதியில் வீடுகள் குறைவாகவே உள்ளது. இவர்கள் இருவரும் தனியாக வசித்து வந்ததை நோட்டமிட்டே கொலையாளிகள் இருவரை யும் கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    கொலையாளிகள் பவுலின் மேரி, திரேசம்மாளுக்கு நன்கு அறிமுகமானவர்களாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    Next Story
    ×