search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர்ந்து 3 மணிநேரம் சிலம்பம் சுற்றி உலகசாதனை
    X

    உலக சாதனை படைத்த மாணவ, மாணவிகள்.

    தொடர்ந்து 3 மணிநேரம் சிலம்பம் சுற்றி உலகசாதனை

    • குருசாமிபாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பாக விழிப்புணர்வு சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • ஒரு மணி நேரம் ஒரு கையை கட்டிக்கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கண்ணை கட்டிக்கொண்டும் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளின் ஊக்குவிக்கும் விதமாக சிவம் சிலம்பம் அறக்கட்டளை மற்றும் குருசாமிபாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பாக விழிப்புணர்வு சிலம்பம் உலகசாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 3வயது முதல் 21வயது வரை உள்ள மாணவ- மாணவிகள் சுமார் 300 பேர் கலந்து கொண்டு, ஒரு மணி நேரம் கால்களை முட்டி போட்டுக் கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கையை கட்டிக்கொண்டும், ஒரு மணி நேரம் ஒரு கண்ணை கட்டிக்கொண்டும் தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றினர்.

    மேலும் 7 வயது மாணவன் பரித்ராஜ் மற்றும் 12-வயது மாணவி இனியா ஆகியோர் 15அடி உயரத்தில் 6200ஆணிகள் பதித்த ஆணி பலகையின் மீது நின்று ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்தினர். இந்த உலக சாதனை நிகழ்ச்சியை குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப்பள்ளி செயலாளர் அர்த்தனாரி "மாதிரி ஒலிம்பிக் தீபம்" ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஜெட்லி புக் ஆப் நிறுவனம் மாணவர்க ளின் முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்து, அதன் நிறுவனர் ஜெட்லி மாணவர்களுக்கு உலகசாதனை சான்றிதழ், மெடல் வழங்கினார்,

    மேலும் சிவம் சிலம்பம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது,

    நிகழ்ச்சியை சிவம் சிலம்பம் அறக்கட்டளை நிறுவனரும் சிலம்பம் தற்காப்புக்கலை பயிற்சியக தலைமை ஆசானுமான வே.மாதையன் தலைமையில் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் முன்நின்று நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருசாமி பாளையம் சிவம் சிலம்பம் பயிற்சி பள்ளியின் பயிற்சியாளரும்,மல்லூர் ஆல் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவரு மான தமிழ்ச்செல்வன் செய்தி ருந்தார்.

    Next Story
    ×