search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக மோசடி-இளம்பெண் உள்பட மேலும் 3 பேர் கைது
    X

    அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக மோசடி-இளம்பெண் உள்பட மேலும் 3 பேர் கைது

    • காவலாளியிடம் தங்களது செல்போனில் உள்ள சில பெண்களின் போட்டோக்களை காட்டினர்.
    • இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது

    கோவை:

    பீளமேட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த பெண் உள்பட 4 பேர் சிக்கினர்.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்ட தாவது:-

    கோவை சவுரிபாளை யத்தில் தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.

    இங்கு சம்பவத்தன்று வந்த சில வாலிபர்கள், காவலாளியிடம் தங்களது செல்போனில் உள்ள சில பெண்களின் போட்டோக்களை காட்டினர். பின்னர் அவர்கள் தங்கி இருக்கும் குடியிருப்பை காட்டுங்கள் என கூறியுள்ளனர்.

    அதனை பார்த்த காவலாளி, அப்படி யாரும் இங்கு இல்லை என்றார். ஆனால் வாலிபர்கள் எங்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் புகைப்படத்தை அனுப்பிய பெண், தான் இங்கே தங்கி இருப்பதாகவும், ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பினால் ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கலாம் என கூறினார்.

    அதனை நம்பி நாங்கள் பணத்தை அனுப்பி வைத்தோம். அதன் பின்னர் இங்கு வந்து அந்த பெண்ணிடம் ஜாலியாக இருப்பதற்காக வந்தோம் என்றனர்.

    இதுகுறித்து காவலாளி, அடுக்குமாடி குடியிருப்பு சூப்பர்வைசருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில் அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி வாலிபர்களிடம் பணம் மோசடி செய்தது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுபாஷ் சந்தர் (வயது 24) மற்றும் கோவையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கன்னியாகுமரியை சேர்ந்த ஆர்த்தி (24), கரூரைச் சேர்ந்த (26), குமரவேல்(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×