என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெய்வேலி அருகே அண்ணன் மகனை அடித்துக் கொன்ற சித்தப்பா, சித்தி உள்பட 3 பேர் கைது: மேலும் 3 பேருக்கு வலைவீச்சு
- சிகிச்சை பெற்று வந்த ரகுபதி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
- சாரங்கபாணி, ராஜாமணி, அனிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து கிராமத்தில் வசிப்பவர் விஸ்வநாதன். இவரது தம்பி சாரங்கபாணி. இவ்விரு குடும்பத்தாருக்கு இடையே சில தினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட தகராறில், விஸ்வநாதன், அவரது மனைவி கஸ்தூரி, மகன் ரகுபதி, மருமகள் வைதேகி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் சாரங்கபாணி, அவரது மனைவி ராஜாமணி, மகன்கள் உதயசூரியன், ரஞ்சினிகுமார், மருமகள்கள் அனிதா, பரிமளா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியல் சிகிச்சை பெற்று வந்த ரகுபதி (எலக்ட்ரீசியன்) நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார், இந்த வழக்கினை கொலை வழக்காக மாற்றினர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி ரகுபதியின் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர்.
அதன்படி, சாரங்கபாணி, ராஜாமணி, அனிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள உதயசூரியன், ரஞ்சினிகுமார், பரிமளா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ளவர்களின் செல்போன் எண்ணின் டவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாரங்கபாணி உறவினர் வீடுகளில் இரவு நேரங்களில் நெய்வேலி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்கள் நெய்வேலியை விட்டு தப்பிச் செல்லமுடியாதவாறு போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.