search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இ-சேவை மையம் தொடங்ககுவதற்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி கடைசி நாள்
    X

    கலெக்டர் சாருஸ்ரீ.

    இ-சேவை மையம் தொடங்ககுவதற்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி கடைசி நாள்

    • இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது.
    • மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டுள்ளது.

    இதன் நோக்கமானது இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அங்கு மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதாகும்.

    இத்திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய https://tnesevai.tn.gov.in (அல்லது) https://tnega.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி வருகிற 30-ந் தேதி இரவு 8 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

    கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

    விண்ணப்ப தாரர்களுக்குரிய பயனர் மற்றும் கடவுச்சொல் (User Id & Password) விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணுக்கு மின்னஞ்சல் வழியாக வழங்கப்படும்.

    மேலும், அருகில் உள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை 'முகவரி' ஆண்ட்ராய்டு மொபைல் செயலியை பயன்படுத்தி காணலாம் (அல்லது) https://.tnega.tn.gov.in என்ற இணை யதளத்தில் காணலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×