search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் நாளை 3-ம் கட்ட கலந்தாய்வு
    X

    நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் நாளை 3-ம் கட்ட கலந்தாய்வு

    • நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது.
    • விண்ணப்பித்த மாணவிகள் அனைவரும் காலை 9 மணிக்கு பங்கேற்க வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் பால்கிரேஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியா் சோ்க்கைக்கான மொத்த இடங்கள் 970. இவற்றில் முதலாம் மற்றும் 2-ம் கட்ட கலந்தாய்வில் சோ்க்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 720 ஆகும். தற்போது காலியாக உள்ள மீதமுள்ள இடங்கள் 250.

    இந்தச் சோ்க்கை இடங்களுக்கு கல்லூரி வளாகத்தில் 3-ம் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டியல் துறை ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவிகள் அனைவரும் காலை 9 மணிக்கு பங்கேற்க வேண்டும்.

    கலந்தாய்வுக்கு வரும் மாணவிகள் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ்கள், ஆதாா் அட்டை ஆகியவற்றின் மூலச் சான்றிதழ் மற்றும் இரு நகல்களைக் கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும். சோ்க்கை இடம் உறுதியான பிறகு கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×