search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புல்வாமா தாக்குதல் 4-ம் ஆண்டு நினைவு தினம்: மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவ-மாணவிகள்
    X

    மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய காட்சி

    புல்வாமா தாக்குதல் 4-ம் ஆண்டு நினைவு தினம்: மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய பள்ளி மாணவ-மாணவிகள்

    • புல்வாமா தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 40 இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர்.

    எட்டயபுரம்:

    கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அன்று ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது தற்கொலை படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் தமிழக வீரர் உட்பட 40 இந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் ஒட்டுமொத்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

    இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் நினைவாக உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி, நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி எட்டயபுரம் அருகே உள்ள ராமனூத்து கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் பள்ளியின் தலைமையாசிரியர் இப்ராஹிம், உதவி ஆசிரியை இந்திரா, அ.தி.மு.க. நிர்வாகி ராஜகுமார் உட்பட ஏராளமான பெற்றோர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×