என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைபர் படகுகள்.
5 ஆயிரம் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
- 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது.
- மீன் பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரை திரும்பினர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடி யக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது.
இதனால் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
இதனால் இன்று 2-வது நாளாக 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
ஒரு சில மீனவர்கள் கரையோரம் மீன்பிடிக்க சென்ற நிலையில் காற்று அதிகமாக வீசியதால் உடனடியாக கரை திரும்பி னார்.
இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்ப டுகிறது.
Next Story






