என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
களக்காடு அருகே 50 ஏக்கர் கோவில் நிலங்கள் மீட்பு- அதிகாரிகள் நடவடிக்கை
- அமைச்சர் சேகர்பாபு ஆலோசனையின்படி ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது.
- 22 ஏக்கர் நிலம் பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது.
களக்காடு:
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்கள் சில இடங்களில் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆலோசனையின் படி ஆக்கிரமிப்பில் இருந்து கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது.
கோவில் நிலம்மீட்பு
அந்த வகையில் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை யினருக்கு புகார்கள் வந்தது.
இதனைதொடர்ந்து நெல்லை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் கவிதா பிரி யதர்ஷினி வழிகாட்டுதலின் பேரில் உதவி ஆணையர் கவிதா தலைமையில் கோவில்கள் தனிப்பிரிவு தாசில்தார் இந்திரா காந்தி முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் முருகன் சரக ஆய்வாளர் லதா மற்றும் கோவல் பணியாளர்கள் சிங்கிகுளத்தில் ஆக்கிரமிப்பில் இருந்து நிலங்களை பார்வையிட்டு, அதனை அளவையர்கள் மூலம் அளவீடு செய்து கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.
அதிகரிக்க நடவடிக்கை
அதன் பின்னர் 22 ஏக்கர் நிலம் பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விடப்பட்டது. மீதமுள்ள 28 ஏக்கர் நிலமானது கோவிலின் நேரடி சுவாதீனத்திற்கு எடுக்கப்பட்டு மீண்டும் மறு பொது ஏலத்திற்கு விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
இதுபோல ஏர்வாடி திருவழுதீஸ்வரர் திருக்கோவில் மற்றும் அதன் தொகுப்பு கோவில்கள் அனைத்திற்கும் துறை நில அளவையர்கள் மூலம் 150 ஏக்கர் அளவீடு செய்யப்பட்டு அதில் சுமார் 65 ஏக்கர் வரை பொது ஏலத்தின் மூலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், மேலும் தொடர்ந்து கோவில் நிலங்கள் ஏலம் விடப்பட்டு கோவில் நிலங்களின் மூலம் கோவிலுக்கு வரும் வருவாய் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.