என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் வீட்டிற்குள் புகுந்து 6½ பவுன் நகை-ரூ.42 ஆயிரம் திருட்டு
- மர்பநபர் ஒருவர் ஓடுவதை கண்டு சஞ்சீவ்குமார் சார்தா அதிர்ச்சி அடைந்தார்.
- இதுகுறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை வேலாண்டிபாளையம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவ்குமார் சார்தா(55). இவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். வழக்கம் போல கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீட்டிற்கு வந்தார்.
பின்னர் குடும்பத்தினருடன் வீட்டில் உள்ள 1-வது மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டின் மொட்டை மாடியில் இருந்து அடையாளம் தெரியாத மர்பநபர் ஒருவர் ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 6½ கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.42 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
Next Story






