search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    75-வது சுதந்திரதின அமுதப் பெருவிழா  அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்  பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
    X

    75-வது சுதந்திரதின அமுதப் பெருவிழா அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

    நாகர்கோவில், ஆக. 12-

    கன்னியாகுமரி மாவட் டத்திற்குட்பட்ட அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பான முன் னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர் களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்டகலெக்டர் அலுவலக வருவாய் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் அனைத்து துறை அலுவலர் களுடனான கலந்தாய்வு மேற்கொ ண்டார் . பின்னர் அவர் கூறியதாவது:-

    மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின் படி 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவினை வெகுசிறப்பாக கொண் டாடுவது குறித்தும், சுதந் திர போராட்ட வீரர்களின் தியாகத்தினை பொதுமக்க ளிடையே எடுத்து கூறுவது மற்றும் விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் விதமாகவும், தேச பக்தியினை உணர்த்தும் விதமாகவும் நாளை 13-ந்தேதி காலை முதல் 15-ந்தேதி சூரியன் மறையும் வரை (மாலை 6 மணி) கன்னியாகு மரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வீடுகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறு வன கட்டிடங்களின் முகப் பில் முழு மரியாதையுடன் தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத் திற்குட்பட்ட ஊரக மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 2 லட்சத்து 25 ஆயிரம் தேசிய கொடிகள், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகு திகளில் 70 ஆயிரம் தேசிய கொடிகள், கொல்லங்கோடு நகராட்சியில் 15 ஆயிரம் தேசிய கொடிகள் , பத்ம நாபபுரம் நகராட்சியில் 5 ஆயிரம் குழித்துறை நகராட்சியில் 6 ஆயிரம் தேசிய கொடிகள்.

    குளச்சல் நகராட்சியில் 6 ஆயிரம் தேசிய கொடிகளை வீடுகளின் முகப்பில் முழு மரி யாதையுடன் ஏற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நாளை 13-ந்தேதி அன்று அரசு அலுவலகங்கள் , பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறு வன கட்டிடங்களின் முகப் பில் முழு மரியாதையுடன் தேசிய கொடியினை ஏற் றுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    மாவட்டத் திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி களில் தேர்ந் தெடுக்கப்பட்ட உள்ளாட் சித் தலைவர்கள் ஆகஸ்ட் 15-ந் தேதி அன்று தேசிய கொடி யேற்றுவதை உறுதிப்படுத் திடதுறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    13-ந் தேதி அன்று காலை முதல் 15 ம் தேதி அன்று சூரி யன் மறையும் நேரத்தில் தேசிய கொடியினை , முழு மரியாதையுடன் கீழே இறக்கி பத்திரப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப் படுகிறது.

    இவ்வாறு அவர் தெரி வித்தார்.

    Next Story
    ×