search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில்  81 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்
    X

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் 81 சதவீதம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்

    • தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
    • இன்று காலை வரை சிறப்பு முகாம்கள் மற்றும் இணையதளம் மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை 9 லட்சத்து 40 ஆயிரத்து 944 பேர் இணைத்துள்ளனர்

    நெல்லை:

    தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரியம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள்.

    சிறப்பு முகாம்கள்

    கூட்ட நெரிசலை தவிர்க்கவும், எளிதாக ஆதார் எண்ணை இணைப்பதற்காகவும் பல்வேறு இடங்களில் மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் ஆதார் எண்ணை பொதுமக்கள் இணைத்து வருகிறார்கள்.

    நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மின்வாரியம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் வருகிற 31-ந் தேதி வரை நடத்தபட உள்ளது.

    81 சதவீதம் பேர்

    பொங்கல் பண்டி கையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக கடந்த 3 நாட்க ளாக சிறப்பு முகாம்கள் நடத்தப் படவில்லை. இந்நிலையில் இன்று மீண்டும் சிறப்பு முகாம் தொடங்கியது.

    இதில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மின் இணைப்பு எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்தனர்.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 57 ஆயிரத்து 465 மின் நுகர்வோர்கள் உள்ளனர். இன்று காலைவரை சிறப்பு முகாம்கள் மற்றும் இணையதளம் மூலமாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை 9 லட்சத்து 40 ஆயிரத்து 944 பேர் இணைத்துள்ளனர். இது 81.21 சதவீதமாகும்.

    Next Story
    ×