என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 9 பேர் கைது
- சிங்காரப்பேட்டை, பேரிகை, ஓசூர் டவுன், அட்கோ, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள சந்து கடைகள் மற்றும் பீடா கடைகளில் சோதனை செய்தனர்.
- கல்லாவி சங்கர் (44), சிங்காரப்பேட்டை பாரதி (45), மத்தூர் ஜெயக்குமார் (40) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட போலீசார் கிருஷ்ணகிரி, மத்தூர், கல்லாவி, சிங்காரப்பேட்டை, பேரிகை, ஓசூர் டவுன், அட்கோ, கெலமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள சந்து கடைகள் மற்றும் பீடா கடைகளில் சோதனை செய்தனர்.
இதில், கெலமங்கலத்தைச் சேர்ந்த கணேஷ் (வயது51), ஓசூர் அட்கோ பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (36), பேரிகையைச் சேர்ந்த முரளி (33), பாகலூரைச் சேர்ந்த பாரதி (30), ஓசூர் டவுன் சந்தியா (35), சாமல்பட்டி சினிவாசன் (60), கல்லாவி சங்கர் (44), சிங்காரப்பேட்டை பாரதி (45), மத்தூர் ஜெயக்குமார் (40) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஹான்ஸ், பான்பாராக், குட்கா போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.