என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கோவையில் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி கோவையில் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி](https://media.maalaimalar.com/h-upload/2023/04/30/1874304-untitled-1.webp)
கோவையில் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கடந்த 2 முறை நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வி அடைந்துள்ளார்.
- திடீரென அங்கிருந்த பிளேடால் கையை அறுத்துக் கொண்டார்.
கோவை,
தென்காசியை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி.
இவர் கோவை போத்தனூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2 முறை நடைபெற்ற நீட் தேர்வில் கலந்து கொண்டு அவர் தேர்வு எழுதினார். அதில் அவர் தோல்வி அடைந்தார். இதனைத்தொடர்ந்து மீண்டும் அவர் நீட் தேர்வுக்கு தயாரானார்.
இந்நிலையில், வருகிற மே 7-ந் தேதி நீட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இந்த முறையும் தேர்ச்சி பெறுவோமா? மாட்டோமோ? என அவர் மன குழப்பத்தில் இருந்து வந்தார்.
இதனால் ஏற்பட்ட பயம் காரணமாக அவர் கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று விடுதியில் இருந்த மாணவி, திடீரென அங்கிருந்த பிளேடால் கையை அறுத்துக் கொண்டார்.
இதை பார்த்த சக மாணவிகள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.