search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக  சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற  சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
    X

    உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

    • கடந்த ஜனவரி மாதம் 29 -ம் தேதி 1208 கர்ப்பிணி பெண்களுக்கு மாபெரும் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • இந்த சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி உலகளாவிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெலமங்கலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சார்பில் கடந்த ஜனவரி மாதம் 29 -ம் தேதி 1208 கர்ப்பிணி பெண்களுக்கு மாபெரும் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார் மற்றும் அவரது மருத்துவ குழுவினர் நடத்தினர்.

    உலக அளவில் ஒரே இடத்தில் அதிகளவு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது இதுவே முதல்முறை என்பதால் இந்த சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி உலகளாவிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதனை அங்கீகரித்த லண்டனை தலைமை இடமாக கொண்ட வேல்ர்டு வைடு புக் ஆப் ரெக்கார்டு நிறுவனத்தினர் அதற்கான சான்றிதழை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் அவரது மருத்துவ குழுவினரிடம் வழங்கினர்.

    அதனைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் சுகாதார துணை இயக்குனர் ரமேஷ்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து வேல்ர்டு வைடு புக் ஆப் ரெக்கார்டு சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அனைவரையும் பாராட்டினார்.

    Next Story
    ×