search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவை கோவில்பாளையம் கால காலேஸ்வரர் கோவிலில் திருப்பணிக்கான ஆலோசனைக் கூட்டம்
    X

    கோவை கோவில்பாளையம் கால காலேஸ்வரர் கோவிலில் திருப்பணிக்கான ஆலோசனைக் கூட்டம்

    • கோவில்பாளையத்தில் 1000 ஆண்டு பழமைவாய்ந்த காலகாலே ஸ்வரர் திருக்கோவில் உள்ளது.
    • இவ்வளவு சிறப்பு மிக்க இக்கோவிலில் திருப்பணி கள் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்றது.

    சரவணம்பட்டி,

    கோவை கோவில்பாளை யத்தில் சுமார் 1000 ஆண்டு பழமைவாய்ந்த புராண வரலாற்று சிறப்புமிக்க காலகாலே ஸ்வரர் திருக்கோவில் உள்ளது.

    இங்குள்ள சிவலிங்கம் எமதர்மராஜன் சாபவி மோசனம் பெறுவ தற்காக கவுசிகா நதிக்கரையில் எமதர்மராஜன் நுரையும் மணலுமாய் சேர்ந்து செய்து வழிபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

    இங்குள்ள குரு பகவான் ஆசியாவிலேயே மிக உயரமான குரு பகவானாக அமைந்துள்ளார். இந்த கோவில் குரு பரிகார ஸ்தலமாகவும், கொங்கு மண்டல குரு பரிகார ஸ்தலமாகும் விளங்குகிறது.

    இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறைக் குட்பட்டும், தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரால் பாதுகாக்கப்பட்டு, பராம ரிக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு சிறப்பு மிக்க இக்கோவிலில் திருப்பணி கள் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்றது.

    அதன்பின்பு திருப்ப ணிகள் நடைபெற வில்லை. இதனால் இக்கோவிலில் திருப்பணிகள் நடத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று கோவிலில் திருப்பணிக்கான ஆலோசனைக் கூட்டம் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுரு சுவாமிகள் தலைமை தாங்கினார். கோவில் செயல் அலுவலர் தமிழ்செல்வன் முன்னிலை வைத்தார்.

    ஆலோசனைக் கூட்டத்தில் காலகாலேஸ்வரர் முன் கல்பிரகாரம் மண்டபம் கட்டுதல், விமானங்களுக்கு வர்ணம் பூசுதல், திருக்கோவிலை சுற்றிலும் தரைத்தளம் அமைத்தல், புதிதாக மடப்பள்ளி, அன்னதான சமையல் கூடம்,திருக்கோயில் அலுவலகம், நால்வர் சன்னதி உள்ளிட்ட 17 பணிகளு க்கான ஆலோசனைகள் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி. நாகராஜ், எஸ் .எஸ். குளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுரேஷ்குமார், சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி துணைத் தலைவர் மணி என்ற விஜயகுமார், மற்றும் சுப்பையன், சுரேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×