search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு மரபுகளை மீட்டெத்து வரும் தம்பதி
    X

    பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு மீட்டெடுத்து வரும் சிவரஞ்சனி- சரவணகுமரன் தம்பதி.

    பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு மரபுகளை மீட்டெத்து வரும் தம்பதி

    • 1500 வகையான நெல் ரகங்களை கடந்த 2015-ம் ஆண்டு முதல் சென்ற ஆண்டு வரை மீட்டெடுத்துள்ளனர்.
    • வேளாண் செம்மல், நம்மாழ்வார் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, குரவப்புலத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சிவரஞ்சனி. இவரது கணவர் சித்த மருத்துவர் சரவணகுமரன் தம்பதியினர்.

    இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய 1500 வகையான நெல் ரகங்களை கடந்த 2015-ம் ஆண்டு முதல் சென்ற ஆண்டு வரை மீட்டெடுத்துள்ளனர்.

    அதனை தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து அதனை அறுவடை செய்து பழங்கால மரபுகளை மீட்டெடுத்து வருகின்றனர்.

    இவர்களது மீட்டெடுப்–புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாநில அரசு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது-2022 அறிவித்து இவ்விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இதுதவிர, சிவரஞ்சனி வேளாண் செம்மல், நம்மாழ்வார் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

    மேலும், சிவரஞ்சனியை கலெக்டர் அருண் தம்புராஜ் பாராட்டி தனது விருப்ப நிதியிலிருந்து ரூ.50 ஆயிரம் வழங்கி உள்ளார்.

    இத்தம்பதியினர், 1500 வகையான ரக நெல் விதைகளை தனது 5 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்துள்ளனர்.

    இவரது வயல்களில் மருத்துவ குணம் நிறைந்த தமிழ்நாட்டு நெல் ரகங்களான கருங்குறுவை, மாப்பிள்ளை சாம்பா, குடவழை, ஓட்டம், கருப்பு கவுணி, நவரா, பூங்கார், ரத்த சாவி, காலாநமக் ஆகிய நெல்வகைகளும், மேற்குவங்க நெல்வகைகளான ராமல்லி, ஓரகழமா, ராஜகழமா மற்றும் கேரளா நெல் வகைகளான ஜெகன்னாத் போக், ஒரிசா புல், கர்ணா புல் ஆகியவைகளை சாகுபடி செய்துள்ளார்.

    இதனை ஏராளமான விவசாயிகளும், விவசாய துறை அதிகாரிகளும் பார்–வையிட்டு இத்தம்பதியின் முயற்சியை பாராட்டினர்.

    Next Story
    ×