search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் பயணிகளுடன் தனியார் பஸ்சை போலீஸ் நிலையம் கொண்டு சென்ற டிரைவர்
    X

    கோவையில் பயணிகளுடன் தனியார் பஸ்சை போலீஸ் நிலையம் கொண்டு சென்ற டிரைவர்

    • உக்கடம் பஸ் நிலையம் வரும்போது 2 வாலிபர்கள் குடிபோதையில் பஸ்சில் ஏறினர்.
    • போத்தனூர் போலீஸ் நிலையத்தில் கண்டக்டர் துரைமுருகன் புகார் செய்தார்.

    குனியமுத்தூர்,

    கோவை கிணத்துக்கடவு அருகே நாலாட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைமுருகன் (23) இவர் காந்திபுரம் -வெள்ளலூர் செல்லும் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று காந்திபுரத்தில் இருந்து வெள்ளலூருக்கு பஸ் புறப்பட்டது. அப்போது உக்கடம் பஸ் நிலையம் வரும்போது இரண்டு வாலிபர்கள் குடிபோதையில் பஸ்சில் ஏறினர்.

    பஸ்சில் ஏறியது முதல் இருவரும் ஒருவரை ஒருவர் ஆபாசமாக பேசிக்கொண்டு பிறருக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். துரைமுருகன் அதை கண்டிக்கும் போது, அவரை இருவரும் சேர்ந்து மிரட்டினர். பஸ் பயணம் செய்பவர்களிடமும் தகாத வார்த்தைகளால் இருவரும் பேசி வந்தனர். போத்தனூர் ஜி.டி.டேங்க் பஸ் ஸ்டாப் அருகே வரும்போது இருவரும் எல்லை மீறி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி டிரைவர் பஸ்சை திருப்பி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தார். போலீஸ் நிலையத்திற்குள் பஸ் செல்வதை கண்டதும் ,ஒரு வாலிபர் இறங்கி தப்பி ஓடிவிட்டார். இன்னொருவரும் இறங்க முயற்சிக்கும் போது பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் கண்டக்டர் துரைமுருகன் புகார் செய்தார்.

    போலீஸார் அந்த நபரிடம் விசாரணை செய்தபோது, அவர் சுந்தராபுரம் சில்வர் ஜூப்ளி விதியை சேர்ந்த ராகுல் (18)என்பது தெரியவந்தது. போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய பிரசாந்த் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    பயணிகளுடன் பஸ் ஒன்று, போலீஸ் நிலையத்துக்குள் வந்து நின்ற சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×