search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 120 படுக்கைகளுடன் காய்ச்சல் வார்டு தயார்- டீன் ரேவதி பாலன் தகவல்

    • நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • இதில் ஒரு சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுவதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    டெங்கு அறிகுறி

    இதில் ஒரு சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுவதால் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

    இதற்கிடையே மருத்துவ நல்வாழ்வு துறை சார்பில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், அவ்வாறு ஒரு சில இடங்களில் பாதிப்பு ஏற்படும் போது அதனை விரைந்து தடுப்பதற்கும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தர விட்டார்.

    தனி வார்டு

    அதன் அடிப்படையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரேவதி இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறிய தாவது:-

    நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்பாகவும் காய்ச்சல் சிகிச்சை வார்டுகளில் பணி செய்யும் மருத்துவர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பாகவும் மருத்து வக்கல்லூரி டாக்டர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளோம்.

    இதில் காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்படும் நபர்க ளுக்கு செய்யப்பட வேண்டிய சிகிச்சைகள் தொடர்பாகவும், அவர்க ளுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பரிசோதனைகள் தொடர்பாகவும் மருத்து வர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

    120 படுக்கைகள்

    அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு வார்டு அமைக்கப் பட்டுள்ளது. அந்த வார்டில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் வகையில் 120 படுக்கைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

    இதில் ஆண் மற்றும் பெண்கள் சிகிச்சைக்காக 60 படுக்கைகள் அமைக்கப் பட்டுள்ளது. இந்த படுக்கை வசதியில் தீவிர சிகிச்சைக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் சிகிச்சை பெறும் வகையில் தனியாக 55 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற 5 படுக்கைகள் தனியாக ஏற்படுத்தப் பட்டுள்ளது.

    காய்ச்சல் வார்டை தனியாக கண்காணிப்பு செய்ய சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்கள், குழு கண்காணிப்பு அதிகாரியாக நியமித்து தொடர் கண்கா ணிப்பு பணியும் நடத்தப் பட்டு வருகிறது. தினமும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முழுவதிலும் சுகாதார பணிகள் பிரத்யேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கொசு ஒழிப்பு பணிகளும் காலை, மாலை என 2 வேளைகளிலும் மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. டெங்கு காய்ச்சல் மற்றும் இதர காய்ச்சலுக்கான தர மான மருந்துகள் கையிருப்பு அதிக அளவில் வைக்கப் பட்டுள்ளது. காய்ச்சல் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு டெங்கு பரிசோதனை உட்பட 7 வகையான ரத்த பரிசோதனை மேற்கொள் ளப்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கிறது.

    டெங்கு பாதிப்பு ஏற்பட்ட வர்களுக்கு தேவைப்படும் ரத்தம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கையிருப்புகள் வைக்கப் பட்டுள்ளது. எந்த நேரத்தி லும் யார் சிகிச்சை வந்தா லும் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் தயார் செய்யப் பட்டு மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள னர்.

    காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்கள் மருத்துவ மனையை நேரில் அணுகி சிகிச்சை பெற வேண்டும். மருந்தகங்களில் தனியாக மருந்து மாத்திரைகள் வாங்கி உட்கொள்ள வேண்டாம்.

    நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு குழந்தைகள் உட்பட 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர். அவர்களுக்கு 7 வகை யான ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் டெங்கு காய்ச்சல் இருப்பது யாருக்கும் கண்டறியப்பட வில்லை. கடந்த 2 தினங்க ளுக்கு முன்பு டெங்கு பாதிக் கப்பட்ட 2 குழந்தைகள் சிகிச்சை பெற்றார்கள். அவர்களும் நல்ல முறையில் சிகிச்சை முடித்து நல்ல உடல் நிலையுடன் வீடு திரும்பி உள்ளனர்.

    மருத்துவமனையை சுற்றிலும் 320 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. இதனால் எந்த விதமான பாதுகாப்பு குறைபாடும் இங்கு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மருத்துவமனை கண்கா ணிப்பாளர் பாலசுப்பிர மணியன், துணை கண்காணிப்பாளர் முகமது ரபி மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×