search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி அருகே வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய பட்டதாரி வாலிபர்
    X

    வளைகாப்பு நடத்தபட்ட நாய்.

    சீர்காழி அருகே வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்திய பட்டதாரி வாலிபர்

    • செல்லப் பிராணி சே சீ முதல் முறையாக கர்ப்பம் அடைந்ததை யொட்டி ஹரிஹரன் அதற்கு சீமந்தம் செய்திட தன் பெற்றோரிடம் கூறினார்.
    • அலங்காரம் செய்து நாய் சேசீயை நிற்க வைத்து, வீட்டின் உரிமையாளர்கள் நலுங்கு வைத்து சீமந்தம் செய்து ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓலையாம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் - மாரியம்மாள்.

    இவர்களது மகன் ஹரிஹரன். பட்டதாரி வாலிபரான ஹரிஹரன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் நாய்க்குட்டியை ஆசையாக வீட்டிற்கு எடுத்து வந்து வளர்த்துள்ளார்.

    மகனின் ஆர்வத்தைக் கண்ட அவரது பெற்றோரும் நாய்க்கு பால், பிஸ்கட் போன்ற உணவுகளை வழங்கி மகனுடன் சேர்ந்து பாசமாக நாய்க்குட்டியை தங்கள் வீட்டின் ஒரு பிள்ளையாக வளர்த்து வந்தனர்.

    அந்த நாய்க்கு சே சீ என பெயரிட்டு தங்கள் குடும்ப உறுப்பினராகவே அவற்றை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் தாங்கள் வளர்த்து வரும் செல்லப் பிராணி சே சீ முதல் முறையாக கர்ப்பம் அடைந்ததை யொட்டி ஹரிஹரன் அதற்கு சீமந்தம் செய்திட தன் பெற்றோரிடம் கூறினார்.

    முதலில் தயங்கி அவரது பெற்றோர் பின்னர் தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்த்து வரும் செல்ல பிராணி சே சீக்கு சீமந்தம் செய்ய முன்வந்தனர்.

    அதன்படி நல்ல நாள் பார்த்து நேற்று சே சீக்கு சீமந்தம் செய்தனர். முன்னதாக ஆப்பிள் உட்பட பழ வகைகள் இனிப்புகளை சீர் வரிசை தட்டுகளாக வைத்தனர். ஒரு சிலரை மட்டும் சீமந்தத்திற்கு அழைத்தனர்.

    பின்னர் சே சீக்கு அலங்காரம் செய்து நாய் சேசீயை நிற்க வைத்து, வீட்டின் உரிமையாளர்கள் நலுங்கு வைத்து சீமந்தம் செய்து ஆரத்தி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதனை வீடியோவாக எடுத்து தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.

    அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×