என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆனைமலையில் கொப்பரை மூட்டைகள் வரத்து அதிகம்
- வியாபாரிகள் முன்னிலையில் கொப்பரை மூட்டைகள் தரம் பிரித்து ஏலமிடப்பட்டது.
- மொத்தம் 221 குவிண்டால் கொப்பரை ரூ.15.71 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது
பொள்ளாச்சி,
ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில் 493 கொப்பரை மூட்டைகள் கொண்டுவரப்பட்டன. கடந்த வாரத்தை விட 242 மூட்டைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதுகுறித்து விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்முருகன் கூறும்போது, ஆனைமலை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 493 மூட்டைகள் கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தினர்.
வியாபாரிகள் முன்னிலையில் அவை தரம் பிரித்து ஏலமிடப்பட்டது. முதல்தர கொப்பரை 205 மூட்டைகள், குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.7640-க்கும், அதிகபட்ச ரூ.8366-க்கும் விற்பனையானது.
2-ம் தர கொப்பரை 288 மூட்டைகள், குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.4813-க்கும், அதிகபட்சம் ரூ.7292-க்கும் விற்பனையானது. 7 வியாபாரிகள், 66 விவசாயிகள் இதில் பங்கேற்றனர்.
கடந்த வாரத்தைவிட 242 மூட்டைகள் வரத்து அதிகரித்தும், குவிண்டாலுக்கு ரூ.511 விலை உயர்ந்தும் காணப்பட்டது. மொத்தம் 221 குவிண்டால் கொப்பரை ரூ.15.71 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது" என்றார்.