என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எரியோட்டில் இன்று அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
- பாலத்தின் அடியில் இன்று அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- போலீசார் உடலை கைப்பற்றி குடிபோதையில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு யாரேனும் தள்ளி விட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எரியோடு:
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு சந்தைப்பேட்டை யில் புதிதாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் அடியில் இன்று அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் மல்லப்புரம் பஞ்சாயத்து நல்லாகவுண்டன்பட்டியை சேர்ந்த மனோகரன்(52) என தெரியவந்தது.
விவசாய கூலித்தொழி லாளியான இவர் மதுப்பழ க்கத்திற்கு அடிமையானவர். சம்பவத்தன்று சைக்கிளில் சென்றவர் பாலத்திற்கு அடியில் கீழே விழுந்தது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி மனைவி மட்டும் உள்ளார். குழந்தை கள் இல்லை. குடிபோதையில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு யாரேனும் தள்ளி விட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.