search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த பயணி தனிமைப்படுத்தி கண்காணிப்பு
    X

    சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த பயணி தனிமைப்படுத்தி கண்காணிப்பு

    • விமான நிலையத்தில் மருத்துவ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் வெளிநாடுகளில் இருந்த கோவைக்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் மருத்துவ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் விமானத்தில் வந்த கணபதியை சேர்ந்த 41 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து அவருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மேலும் தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தினர். தொடர்ந்து அவரை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    அவரது சளி மாதிரி எடுக்கப்பட்டு புதிய வகை கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டுபிடிப்பதற்காக மரபணு சோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்த கோவைக்கு வந்த கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் தொற்று அதிமுள்ள பகுதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 157 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் நேற்று ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக வீடுகள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் என 100 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்ற 11 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.

    Next Story
    ×