என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் கடையை உடைத்து ரூ.14 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு
- எட்வி ன்ஜார்ஜ் கூடலூர் போலீசில் புகார் அளித்தார்.
- திருடியது கூடலூர் யானைசெத்தகொல்லியை சேர்ந்த மனோகரன்(37) என்பது தெரியவந்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் எட்வின் ஜார்ஜ்(வயது58).
இவர் கூடலூர்-தேவர்சோலை ரோடு பகுதியில் சொந்தமாக கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலை வழக்கம் போல கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதை பார்த்து அதிர்ச்சியான அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கடையில் இருந்த ரூ.14 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடு போய் இருந்தது.
இவர் கடையை பூட்டி சென்றதை நோட்டமிட்ட நபர்கள் அதன்பின்னர் கடையை உடைத்து உள்ளே நுழைந்து பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து எட்வி ன்ஜார்ஜ் கூடலூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடையை உடைத்து பொருட்களை திருடியது கூடலூர் யானைசெத்தகொல்லியை சேர்ந்த மனோகரன்(37) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






