என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானை
    X

    கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானை

    • காட்டு யானைகள் சமவெளிப் பகுதியிலிருந்து மலைக் கிராமப் பகுதிகளுக்கு வருகை தருகின்றன.
    • பச்சை தேயிலை பறிக்கும் பணியை தொழிலாளா்கள் பாதியில் நிறுத்திவிட்டு திரும்பினா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை சுற்றுவட்டார கிராமங்களில் காபி பழம் விளைச்சல் தொடங்கியுள்ள நிலையில், பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளிப் பகுதியிலிருந்து மலைக் கிராமப் பகுதிகளுக்கு வருகை தருகின்றன. அவ்வாறு வரும் யானைகளில் சில யானைகள் அவ்வப்போது வழி தவறி வேறு கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து விடுகின்றன. இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, குஞ்சப்பனை முள்ளூா் கிராமப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டிருந்தது. இதன் காரணமாக பச்சை தேயிலை பறிக்கும் பணியை தொழிலாளா்கள் பாதியில் நிறுத்திவிட்டு திரும்பினா். தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    Next Story
    ×