search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஜீப்பை வழிமறித்து தாக்கிய ஒற்றை காட்டு யானை
    X

    கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஜீப்பை வழிமறித்து தாக்கிய ஒற்றை காட்டு யானை

    • மற்றொரு இடத்தில் மோட்டார் சைக்கிளையும் தாக்க முயன்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
    • டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு வாகனத்தை பின்னோக்கி இயக்கினார்

    அரவேணு,

    கோத்தகிரி மலைப்பாதை யில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    வனத்தை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் மலைப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.

    அவ்வப்போது மலைப்பா ைதயில் வந்து நின்று கொண்டு, அந்த வழியாக வரும் வாகனங்களையும் மறித்து வருவது வாடிக்கை யாகி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை கோத்தகிரி சாலையில் தட்டப்பள்ளம் என்ற இடத்தில் உள்ள வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை மலைப்பாதைக்கு வந்தது.அப்போது அந்த வழியாக ஜீப் ஒன்று வந்தது. யானை வருவதை பார்த்த ஜீப் டிரைவர் வாகனத்தை சாலையோரமாக நிறுத்த முயன்றார்.அப்போது ஒற்றை யானை ஜீப்பை நோக்கி வேகமாக வந்தது. வந்த வேகத்தில் யானை ஜீப்பை தாக்கியது. இதனால் வாகனத்தில் இருந்தவர்கள் மிகவும் அச்சம் அடைந்தனர்.

    பின்னர் டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு வாகனத்தை பின்னோக்கி இயக்கினார். சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து சென்று விட்டது.

    இதன் பின்னரே ஜீப்பில் இருந்தவர்களும், பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனர்.இதையடுத்து ஜீப்பை டிரைவர் அங்கிருந்து வாகனத்தை எடுத்து சென்றார்.கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள காட்சி முனை பகுதியில் நீண்ட நேரமாக ஒற்றைக் காட்டு யானை மேய்ச்சலில் ஈடுபட்டது.

    இதனால் அந்த சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சாலையை கடக்க முயன்றனர்.அப்போது, யானை ஆக்ரோஷம் அடைந்து அவர்களை நோக்கி வந்தது. இதனால் பயந்து போன மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்தவர் இறங்கி ஓடி விட்டார்.

    மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் சாதுர்யமாக வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பியோடி விட்டார். தற்போது இந்த வீடியோக காட்சிகள் சமூக வலைத ளங்களில் வைரலாகி வருகிறது.

    கோத்தகிரி-மேட்டுப்பா ளையம் மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் வனத்துறையினர் யானை களை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×