என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்-தெற்கு ரெயில்வே பொது மேலாளரிடம் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    தெற்கு ரெயில்வே பொது மேலாளரிடம், ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை மனு வழங்கியபோது எடுத்தபடம்.

    தென்காசி வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்-தெற்கு ரெயில்வே பொது மேலாளரிடம் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை

    • தாம்பரத்தில் உள்ள புதிய இரண்டு நடை மேடை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    • தென்காசி ரெயில் நிலையத்தை ரெயில் முனையமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில்:

    நெல்லையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஸ்ரீ கவுசல் கிஷோரை நேரில் சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    நெல்லையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில், மதுரை வழியாக பெங்களூருக்கு சிறப்பு ரெயில், தென்காசி வழியாக சிறப்பு ரெயில்களாக இயங்கிக் கொண்டிருக்கும் நெல்லை - தாம்பரம், நெல்லை - மேட்டுப்பா ளையம் சிறப்பு ரெயில்களை நிரந்தர ரெயில்களாக இயக்க வேண்டும்.

    ஈரோடு - நெல்லை ரெயிலை தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீட்டித்தல், பாவூர் சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம் ரெயில் நிலையங்களின் நடை மேடையை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க வேண்டும்

    தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கும் வகையில் தாம்பரத்தில் உள்ள புதிய இரண்டு நடை மேடை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். தென்காசியில் இருந்து ரெயில்கள் இயக்கும் வகையில் தென்காசி ரெயில் நிலையத்தை ரெயில் முனையமாக மாற்ற வேண்டும். அனைத்து ரெயி ல்களும் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் வகையில் நடவடி க்கை எடுக்க வேண்டும்.

    குறிப்பாக நெல்லை - தாம்பரம் சிறப்பு ரெயில் சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தில் நின்று செல்லுதல், நெல்லை - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் பாவூர்சத்தி ரத்தில் நின்று செல்ல வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக் கொண்ட தெற்கு ரெயில்வே பொது மேலாளர், சங்கரன்கோவிலில் ரெயில் நின்று செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தென்காசி வழியாக பெங்களூருக்கு ரெயில் இயக்குவதற்கு சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்படும் எனவும் தரெிவித்தார். சந்திப்பின்போது ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா மற்றும் சாந்தசீலன் உடன் இருந்தனர்.

    Next Story
    ×