என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு8 வயது மகனுடன் மண்எண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த தாய் - மற்றொரு வாலிபரும் தற்கொலை முயற்சி
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கி மை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று காலை பெண் ஒருவர் தனது மகனுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்தார். அவர் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டார்.அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரிடம் இருந்த மண்எண்ணையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.இதில் அவர் பண்ருட்டி தாலுக்கா கண்டரக்கோட்டையை சேர்ந்த பரமேஸ்வரி என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் கூறியதாவது:- எனது கணவர் முத்துக்குமரன் என்னை 2-வது திருமணம் செய்து கொண்டு உடல்நிலை பாதிப்பு காரணமாக இறந்துவிட்டார்.நான் எனது 8 வயது மகனுடன் முத்துக்குமரன் வீட்டில் இருந்து வருகிறோம். எங்களுக்கு சரியான முறையில் உணவு, மகன் படிப்பு செலவுக்கு பணம் போன்றவைகளை வழங்காமல் அவரது குடும்பத்தார் துன்புறுத்தி வருகின்றனர்.இது தொடர்பாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை ஏதும் இல்லை. தினந்தோறும் என்னை சித்திரவதை செய்து வருவதோடு, நானும் எனது மகனும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மேலோங்கி வருகின்றது. எனது தாயார் வீட்டிலும் எந்தவித ஆதரவும் எனக்கு கிடையாது.ஆகையால் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலக போலீசாரிடம் பரமேஸ்வரி கூறினார்.இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலக போலீசார் பரமேஸ்வரி மற்றும் அவரது மகனை கலெக்டர் அலுவலகத்திற்கு உள்ளே அழைத்து சென்று மனு அளிக்க வைத்தனர். மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம் :கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வாலிபர் தன் மீது மண்எண்ணையை ஊற்றி கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாலிபரிடம் இருந்த கேனை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், பண்ருட்டி மேல் இருப்பை சேர்ந்த அருள் முருகன் என்பது தெரியவந்தது. அவர் கூறும்போது, எனது தந்தையின் பெயரில் நிலம் உள்ளது. ஒரு கும்பல் எனது தந்தை பெயரில் உள்ள பட்டாவை மாற்றம் செய்து உள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே மனு வழங்கி உள்ளேன்.ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், என் தந்தையின் பெயரில் மீண்டும் பட்டாவை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.இதனை தொடர்ந்து போலீசார் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்து தீர்வு காண வேண்டும் என எச்சரிக்கை செய்து அனுப்பினர். இந்த2 சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்