என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியதை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டின் மூக்கை உடைத்த வாலிபர்
- சேலம் டவுன் பகுதியில் போக்குவரத்து போலீஸ் ஏட்டாக இருப்பவர் பாண்டியன் இன்று காலை மோட்டார் சைக்கிளில் செல்போன் பேசிய படியே வந்தார்.
- இதனைப் பார்த்த பாண்டியன் அவரை பஸ் நிலையம் அருகில் இப்படி செல்போனில் பேசிக்கொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லலாமா என்று கேட்டார். வாக்குவாதம் முற்றிலும் ஆத்திரமடைந்த கோகுல்ராஜ், பாண்டியன் மூக்கில் ஓங்கி குத்தினார் .
சேலம்:
சேலம் டவுன் பகுதியில் போக்குவரத்து போலீஸ் ஏட்டாக இருப்பவர் பாண்டியன். இவர் இன்று காலை பழைய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சேலம் அம்மாபேட்டை சேர்ந்த கோகுல்ராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் செல்போன் பேசிய படியே வந்தார்.
இதனைப் பார்த்த பாண்டியன் அவரை பஸ் நிலையம் அருகில் இப்படி செல்போனில் பேசிக்கொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லலாமா என்று கேட்டார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதமாக மாறியது .வாக்குவாதம் முற்றிலும் ஆத்திரமடைந்த கோகுல்ராஜ், பாண்டியன் மூக்கில் ஓங்கி குத்தினார் .
இதில் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .பின்னர் சம்பவம் குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் ஏட்டு பாண்டியனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோகுல் ராஜனை சேலம் டவுன் போலீசார் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் போலீஸ் ஏட்டு கோகுல்ராஜ் சேலம் போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா சந்தித்து நலம் விசாரித்தார்.
சேலம் மாநகரில் போக்குவரத்து போலீசாரை வாலிபர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.