search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரிகளின்  வேண்டுகோளை ஏற்று   முழு அடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு
    X

    வியாபாரிகளின் வேண்டுகோளை ஏற்று முழு அடைப்பு போராட்டம் ஒத்திவைப்பு

    • கோவையில் நாளை முழு அடைப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.
    • மறுபரிசிலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

    கோவை,

    கோவையில் நாளை முழு அடைப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் போராட்டத்தை ஓத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோவை மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-கோவை மாநகர் மாவட்ட பாரதீய ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி நாளை (31-ந் தேதி) முழு அடைப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. தமிழக தலைவர் அண்ணாமலை, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கோவை சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை என்.ஐ.ஏ. எடுக்க உடனடியாக உத்தரவிட்டு விசாரணையை முழுவீச்சில் தொடங்கி உள்ளது.

    இந்தநிலையில் கோவை நகர வியாபா ரிகளும், தொழில் அதிபர்களும், தொழில் முனைவோர்களும் மாநில தலைவர் அண்ணாமலையை தொடர்பு கொண்டு தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு கடையடை ப்பை மறுபரிசி லனை செய்யுமாறு கேட்டு க்கொண்டனர்.

    அதன்படி மாநில தலைவர் அண்ணாமலை, என்னுடனும், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம். எல்.ஏ. மற்றும் முக்கிய தலை வர்களுடன் பேசினார்.அப்போது, கோவை நகர மக்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அவரின் அறிவுறுத்தலை ஏற்று நாளை (31-ந் தேதி) நடைபெறுவதாக இருந்த கடையடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக ்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×