search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் இன்று மதியம் விபத்து நெடுஞ்சாலை பணியாளர்வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது
    X

    தலைகுப்புற கவிழ்ந்து கிடக்கும் வாகனத்தை படத்தில் காணலாம்.

    பண்ருட்டியில் இன்று மதியம் விபத்து நெடுஞ்சாலை பணியாளர்வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது

    • தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலை அமைக்கும் பணி கடந்த 15 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
    • சாலை நடுவே தலைக்குப் புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    கடலூர்:

    விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை 4 வழி சாலை அமைக்கும் பணி கடந்த 15 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் 1 மணி அளவில் காடாம்புலியூரில் இருந்து நெய்வேலி இந்திரா நகர் நோக்கி நெடுஞ்சாலை பணியாளர்கள் கார் வேகமாக வந்துகொண்டிருந்தது. காடாம்புலியூர் அடுத்த கீழக்கொல்லை பஸ் நிறுத்தம் அருகே அந்த வாகனம் வந்து கொண்டிருந்த போது குறுக்கே வந்தமோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.

    இதனால் நெடுஞ்சாலை பணியாளர் வந்த வாகனம் சாலை நடுவே தலைக்குப் புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர், குறுக்கே மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் காயம் ஏதும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன், முத்தாண்டிக்குப்பம் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×