என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாநிலம் முழுவதும் உள்ளஅரசு கல்லூரிகளில் சேர நாமக்கல்லில் உதவி மையம்
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2023-24-ம் கல்வியாண்டு இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு, மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
- கல்லூரி வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சேவை மையத்தில் தங்களது சேர்க்கை விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
நாமக்கல்:
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2023-24-ம் கல்வியாண்டு இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு, மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க, நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம், இன்று முதல் வருகிற 19-ந் தேதி வரை செயல்பட உள்ளது.
பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ, மாணவியர் பாஸ்போட் சைஸ் போட்டோ, 10 மற்றும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, இ-மெயில் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றுடன் கல்லூரி வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சேவை மையத்தில் தங்களது சேர்க்கை விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
பொது பிரிவினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ48, பதிவுக் கட்டணமாக ரூ.2 என மொத்தம் ரூ.50 (ஒவ்வொரு 5 கல்லூரிகளுக்கும்) செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு பதிவு கட்டணமாக ரூ.2 மட்டும் செலுத்தினால் போதும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் இண்டர்நெட் வழியாக செலுத்தலாம். இண்டர்நெட் மூலம் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள், கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் பேங்க் டிராப்ட் மற்றும் நேரடியாக பணமாகவும் செலுத்தலாம்.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை கலை பிரிவில் தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், வணிக நிர்வாகவியல் மற்றும் வர லாறு பாடப்பிரிவு களுக்கும், அறிவியல் பிரிவில் கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளுக்கும் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் டாக்டர் ராஜா தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்