search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாநகராட்சி பள்ளிகளில்  அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற  நடவடிக்கை- மேயர் ராமச்சந்திரன்  உறுதி
    X

    கூட்டத்தில் மேயர் மேயர் ராமச்சந்திரன் பேசிய காட்சி. அருகில் ஆணையாளர் கிறிஸ்துராஜ் உள்ளார்.

    சேலம் மாநகராட்சி பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற நடவடிக்கை- மேயர் ராமச்சந்திரன் உறுதி

    • சேலம் மாநகராட்சி பள்ளிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • சேலம் மாநகராட்சியில் மொத்தம் 96 பள்ளிகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கல்வி நிலைக்குழு மேற்கொள்ளப்பட வேண்டிய கல்வி மேம்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார்.

    சேலம் மாநகராட்சியில் 51 துவக்கப்பள்ளிகள், 29 நடுநிலைப்பள்ளிகள், 9 உயர்நிலைப்பள்ளிகள், 7 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 96 பள்ளிகள் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இப்பள்ளிகளுக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டுதல், கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், கணினி உபகரணங்கள் வாங்குதல், ஆய்வகங்கள் வசதி ஏற்படுத்துதல், தளவாட சாமான்கள் வாங்குதல், பள்ளிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல், கழிப்பிட வசதி, நூலகங்கள் ஏற்படுத்துதல், விளையாட்டு மைதானங்கள், சுற்றுசுவர் போன்ற கல்வி மேம்பாட்டு பணிகளை எவ்வாறு மேற்கொள்ளுவது என்பது குறித்து ஆலோசிக்கபப்ட்டது,

    மேலும் மேற்குறிப்பிட்ட மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி நிதி, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு, சமூக பொறுப்பு நிதி, நமக்கு நாமே திட்டம் மற்றும் அரசின் சிறப்பு நிதி ஆகியவற்றில் இருந்து மேற்கொள்ளுவது குறித்தும், தனியார் கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் மாநகராட்சி பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர கோருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மேயர் ராமச்சந்திரன் பேசியதாவது:

    மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்வது மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.

    அனைத்து பள்ளிகளிலும் மாணவமாணவியர்களுக்கு கழிப்பிட வசதியும், நூலக வசதியும் சுற்றுசுவர் அமைத்தலும் மிக முக்கியமானதாகும். மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பான முறையில் மாணவமாணவியர்களுக்கு கல்வியை கற்று தருகிறார்கள்.

    அந்த பள்ளிகளுக்கு மிக முக்கிய தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதை நோக்கமாக கொண்டு புது பொலிவுடன் கூடிய மாநகராட்சி பள்ளியாக மாற்றி அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    கல்வி நிலைக்குழு உறுப்பினர்கள் மாநகராட்சி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து எடுத்து கூறியுள்ளிர்கள். இது குறித்து ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் நிறைவேற்றி தரப்படும்.

    Next Story
    ×