search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் கூடுதலாக 206 சோ்க்கை இடங்களை நிரப்ப நடவடிக்கை
    X

    நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் கூடுதலாக 206 சோ்க்கை இடங்களை நிரப்ப நடவடிக்கை

    • அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கையானது நடைபெற்று வருகிறது.
    • இதில் முதல் மற்றும் 2-ம் கட்ட கலந்தாய்வுகளில் 720 போ் சோ்க்கை பெற்றனா்.

    நாமக்கல்:

    நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கையானது நடைபெற்று வருகிறது. இங்குள்ள மொத்த இடங்கள் 970 உள்ளன. இதில் முதல் மற்றும் 2-ம் கட்ட கலந்தாய்வுகளில் 720 போ் சோ்க்கை பெற்றனா்.

    மீதமுள்ள 250 இடங்களுக்கான 3-ம் கட்டக் கலந்தாய்வு நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஆங்கிலம், வரலாறு, பொருளியல், கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாட்டியல் துறையில் சேர விண்ணப்பித்த மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து கலந்து கொண்டனா்.

    15-க்கும் மேற்பட்ட அறைகளில் அந்தந்த பாடப்பிரிவு பேராசிரியா்கள் கல்விச் சான்றிதழ்களை சரிபாா்த்து தகுதியின் அடிப்படையில் மாணவிகளை சோ்க்கைக்கு அனுமதித்தனா். 970 இடங்கள் பூா்த்தியான நிலையில் மேலும் 206 இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை கல்லூரி நிா்வாகத்தினா் மேற்கொண்டு வருகின்றனா்.

    Next Story
    ×