search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாபநாசம் பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்- ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    X

    ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.

    பாபநாசம் பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்- ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    • காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்படுகின்றது.
    • மீதமுள்ள 2 பஸ்களையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாபநாசம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மேலாளருக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    பாபநாசம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் பெரும்பாலும் அரசு பஸ்களில் தான் செல்கின்றனர்.

    காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்களில் கடும் கூட்ட நெரிசல் காணப்படுகின்றது. எனவே, மாணவர்கள் நலன் கருதி கூடுதல் அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்- கும்பகோ ணம் மார்க்கத்தில் இயக்க ப்படும் புறநகர் பஸ்கள் சிறிய ஊர்களில் நின்று செல்வதில்லை. இதனால் இந்த பஸ்களின் தடத்தில் உள்ள பகுதிகளில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

    தஞ்சாவூர்- பாபநாசம் இடையே மொத்தம் 4 பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

    மீதமுள்ள 2 பஸ்களையும் உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாபநாசத்தில் இருந்து கபிஸ்தலம் வழியாக திருவையாறுக்கு இயக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள தடம் எண்.51 பஸ் சேவை மற்றும் கும்பகோணம்-வீரமாங்குடி இடையே இயக்கப்பட்டு வந்த தடம் எண். 42 ஆகிய பஸ் சேவைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேவராயன்பேட்டை கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி கும்பகோணம் அய்யம்பேட்டை இடையே பாபநாசம், தேவராயன் பேட்டை, வடக்கு மாங்குடி வழியாக பஸ் சேவையை தொடங்க வேண்டும்.

    கும்பகோணம்- திருவையாறு மார்க்கத்தில் சுவாமிமலை, கபிஸ்தலம், கணபதி அக்ரஹாரம் வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்–பட்டுள்ளது.

    Next Story
    ×