என் மலர்
உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
- நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
- ஊராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை சாலியமங்களம் ஊராட்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் நேரில் ஆய்வு ஆய்வு செய்தார்.
முன்னதாகநம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி, பிளாஸ்டிக் பயன்படுத்து வதை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்துமாறு வலியுறுத்தினார்.
பின்னர் சாலியமங்களம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணி, புதுப்பிக்கும் பணிகளையும் கூடுதல் கலெக்டர் நேரில் பார்வையிட்டு கட்டிடத்தின் தரத்தையும் ஆய்வு செய்த கூடுதல் கலெக்டர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.
ஆய்வின்போது அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன்.
அமானுல்லா, உதவி பொறியாளர் கதிரேசன்,ஊராட்சி மன்ற தலைவர் சக்திசிவக்குமார், துணை தலைவர் செந்தில்கு மார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாமி நாதன். பணி மேற்பார்வையாளர் மீரா. ஒப்பந்ததாரர் சண்.சரவணன்,ஊராட்சி செயலாளர் ஜெகத்குருமற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர், ஊராட்சி பணியாளர்கள் பலர் உடன் இருந்தனர்.






