என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கஞ்சனூர் கோவிலில் நடைபெறும் திருப்பணிகளை பார்வையிட்ட மதுரை ஆதீனம்
- கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து ரூ.6 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடங்கியது.
- திருப்பணியில் கோவிலின் மதில் சுவர் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது.
கும்பகோணம்:
மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கும்பகோணம் அருகே கஞ்சனூர் கற்பகாம்பாள் சமேத அக்னீஸ்வரர் கோயில் நவக்கிரக தலங்களில் சுக்ர தலமாக போற்றப்படுகிறது. இக்கோயிலுக்கு தினமும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகை தந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் சுக்கிர பிரீத்தி வழிபாடு செய்கின்றனர். இக்கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்து ரூ. 6 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கஞ்சனூர் வந்த மதுரை ஆதீனம் 293வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளுக்கு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கோவிலில் சுவாமி, அம்பாள், சுக்கிரன் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு ஆராதனை நடந்தது. கோயிலில் மதுரை ஆதீனத்தின் சார்பில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் சுற்றுசுவர் திருப்பணிகளை மதுரை ஆதீனம் 293 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், கோயில் சுற்றுப்புற 700 மீட்டர் நீளமுடைய மதில் சுவர் திருப்பணி பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது.
மேலும் கோயிலில் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் தனித்தனியாக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. கோயில் திருப்பணிகளுடன் பக்தர்களின் வசதிக்காக சுகாதார வளாகம் அதிநவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட உள்ளது.
மாசி மக உற்சவத்தில் தேர் ஓடுவதற்கு ஏதுவாக கஞ்சனூர் கோயிலுக்கு புதிதாக தேர் செய்திடும் வகையில் விரைவில் திருப்பணி தொடங்கப்பட உள்ளது. வரும் மாசி மக விழாவில் தேரோட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
கஞ்சனூர் கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக நடமாடும் சித்த மருத்துவ வைத்தியசாலை மதுரை ஆதீனத்தின் சார்பில் தொடங்கிடவும், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கோயில்களை முறையாக பராமரிப்பது, திருப்பணி செய்வது, தூய்மையாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும்என்றார்.
தொடர்ந்து திருப்புறம்பியும் சாட்நாதர் சுவாமி கோயிலில் நடைபெறும் தேர் திருப்பணிகளையும் மதுரை ஆதீனம் பார்வையிட்டார். அவருடன் நிர்வாக பொறுப்பாளர் ஆசிரியர் முத்தையன், கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில் கண்காணிப்பாளர் செங்குட்டுவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்