என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
- பி.பி.இ.எஸ். இளநிலை பட்டப்படிப்பு படிக்க பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பள்ளிகளுக்கு இடையேயான ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மாணவர் சேர்க்கை
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு (பி.பி.இ.எஸ்.) மூன்று வருட படிப்பு, இளநிலை உடற்கல்வியியல் (பி.பி.எட்) இரண்டு வருட படிப்பு, முதுநிலை உடற்கல்வியியல் (எம்.பி.எட்) இரண்டு வருட படிப்புகான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
பி.பி.இ.எஸ். இளநிலை பட்டப்படிப்பு படிக்க பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளிகளுக்கு இடையேயான குடியரசு தின போட்டி அல்லது பாரதியார் தின போட்டிகள் ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.
இளநிலை பட்டப்படிப்பு
பி.பி.எட். படிக்க இளநிலை பட்டப்படிப்புடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டியில் பங்கேற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஆதிதிராவிட மாணவர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். மாணவ-மாணவிகள் இளநிலை பட்டப்படிப்பு படிக்கும்போது பல்கலைக்கழகம் சார்பில் ஏதேனும் ஒரு விளையாட்டில் பங்கு பெற்றிருந்தால் (பார்ம் III) அந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். மேலும், இக்கல்லூரியில் பி.பி.இ.எஸ். பயின்றோருக்கும் மற்றும் ஆதித்தனார் கல்வி அறநிலையத்தால் நடத்தப்படும் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு பயின்றோருக்கும் கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும்.
முதுநிலை பட்டப்படிப்பு
எம்.பி.எட். முதுநிலை உடற்கல்வியியல் படிக்க இளநிலை உடற்கல்வியியல் பயின்று இருக்க வேண்டும். மேலும் அதில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மாணவ-மாணவிகள் வயது 35-க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் பி.பி.எட். படித்தவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். மேலும் பல்கலைக்கழக தேர்வில் இளநிலை உடற்கல்வியியலில் தங்கப்பதக்கம் (முதல் தரவரிசை) பெற்றவர்களுக்கும் கல்வி கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்படும்.
சிறப்பு அம்சங்கள்
இந்த கல்லூரி சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றது. தேசிய தரமதிப்பீட்டு குழு மறுமதிப்பீட்டில் 'A' சான்று பெற்று உள்ளது. தரமான ஆசிரியர்கள், விளையாட்டு மைதானங்கள், தங்கும் விடுதிகள் இக்கல்லூரியின் சிறப்பு அம்சங்கள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக அளவில் மாணவ-மாணவிகள் பதக்கங்கள் பெற்று வருகிறார்கள். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு அனைவருக்கும் கல்லூரி நிர்வாகம் வேலைவாய்ப்பை பெற்றுத்தருகிறது.
விண்ணப்பிக்கும் முறை
கல்லூரி பற்றிய அனைத்து விவரங்களும் கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கல்லூரியில் சேர விருப்பம் உள்ளவர்கள் கல்லூரியின் www.drsacpe.com என்ற இணையதளத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியினை தேர்வு செய்து மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கல்வி சான்றிதழ், விளையாட்டு சான்றிதழ் மற்றும் மருத்துவ சான்றிதழ் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கையில் குறைவான இடங்களே இருப்பதால் விரைவில் விண்ணப்பித்து கல்லூரியில் சேரவும்.
இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 04639-245110, 220590 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி முதல்வர் பொ.சாம்ராஜ் தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்