என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
வண்ணார்பேட்டையில் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
By
மாலை மலர்21 April 2023 2:40 PM IST (Updated: 21 April 2023 2:40 PM IST)

- நெல்லை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தொழிலாளர்களின் பணிநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட ஏ.ஐ.டி. யூ. சி சார்பில் வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொது செயலாளர் சடையப்பன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் லட்சுமணன் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களின் பணிநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. துணைத் தலைவர் ரங்கன், மாநில குழு உறுப்பினர் முருகன், செயலாளர் முத்துகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் உலகநாதன், சேதுராமலிங்கம், மணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்..
Next Story
×
X