search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தியா முழுவதும் 130 கோடி மக்களுக்கு இலவச தடுப்பூசி போடவைத்தவர் பிரதமர் மோடி  மத்திய இணை மந்திரி பேச்சு
    X

    இந்தியா முழுவதும் 130 கோடி மக்களுக்கு இலவச தடுப்பூசி போடவைத்தவர் பிரதமர் மோடி மத்திய இணை மந்திரி பேச்சு

    • இந்திய சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகே உள்ள பழைய பேரூராட்சி அலுவலக மைதானத்தில் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது.
    • நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.தளவாய்சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.எம்.ஆர்.காந்தி, திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா, கீல்தொண்டு நிறுவன இயக்குனர் சிலுவைவஸ்தியான்உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி,

    இந்தியாவின்75-வது சுதந்திர திருவிழாவையொட்டி இந்திய சுதந்திர போராட்ட வரலாறு மற்றும் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு அருகே உள்ள பழைய பேரூராட்சி அலுவலக மைதானத்தில் வருகிற 13-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்தப் புகைப்படக் கண்காட்சியின் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் தென்மண்டல இயக்குநர் ஜெனரல் எஸ்.வெங்கடேஸ்வர் தலைமை தாங்கினார். சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் இயக்குனர் ஜெனரல் எம். அண்ணாதுரை வரவேற்று பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே, நிலக்கரி, மற்றும் சுரங்க அமைச்சகத்தின் இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய சுதந்திர போராட்ட வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அதன் பிறகு மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே குத்துவிளக்குஏற்றி 5 நாள் புகைப்படகண்காட்சியை தொடங்கி வைத்துபேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இன்னும் 25 ஆண்டு களுக்குப் பின்னர் நம்நாடு எப்படி இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி நிதிநிலை அறிக்கையை தயாரித்துள்ளார். 2014-ம்ஆண்டில் நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றபோது ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார். இந்த 8 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பிரதமர் மோடி அடுத்த 25 ஆண்டுகளை கணக்கில் கொண்டு தயாரித்திருக்கிறார்.

    25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று அடிப்படையில் மோடியின் தொலை நோக்கு பார்வையில் அந்த திட்டங்களை தொடர்ந்துசெயல்படுத்தி வருகிறார். 130 கோடி மக்களில் 80 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி மேம்படுத்த வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகள், கழிப்பறைகள், மின்சார வசதி, எரிவாயு இணைப்புகள் என்று மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து சிறந்த முறையில் பிரதமர்மோடி செயலாற்றி வருகிறார். கொரோனா காலகட்டத்தி ல் மக்களுக்கு தடுப்பூசி, மாத்திரை, மருந்துகளை உலகத்திலேயே இலவசமாக வழங்கிய ஒரே பிரதமர் மோடி மட்டும்தான். இந்தியா முழுதும் 130 கோடி மக்களுக்கு இலவச தடுப்பூசி போடவைத்தபெருமை பிரதமர் மோடியை சேரும்.

    ஜன்தன் திட்டத்தின் மூலம் 45 கோடி மக்கள் வங்கிக்கணக்கு தொடங்கும் திட்டத்தை செயல்படுத்திஉள்ளார். கடந்த 8 ஆண்டுகளில் உலகத் தலைவர்களை திரும்பிப் பார்க்க வைத்த பிரதமராக மோடி திகழ்கிறார். 8 ஆண்டுகளில் பிரதமர்மோடி செய்த சாதனைகளை ஒரு நாளில் சொல்ல முடியாது.

    இவ்வாறு மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே பேசினார்.

    இந்தநிகழ்ச்சியில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.தளவாய்சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.எம்.ஆர்.காந்தி, திருவனந்தபுரம் கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லையா, கீல்தொண்டு நிறுவன இயக்குனர் சிலுவைவஸ்தியான்உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வங்கிகள் மூலம் ஏழைகளுக்கு கடன் உதவியாக ரூ.15 கோடியே 60 லட்சத்துக்கான காசோலையை மத்திய மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே வழங்கினார். மகளிர் சுய உதவி குழுவைச்சேர்ந்த பெண்களுக்கும் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். முடிவில் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனர் காமராஜ் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை கள விளம்பர துணை இயக்குனர் சிவகுமார் தொகுத்து வழங்கினார்.

    Next Story
    ×